நிக்கி ஹேலி பதவியை இராஜினாமா செய்தார்!!
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அவர் ஒரு நம்பமுடியாத வேலை செய்து முடித்த பின்னர், இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை விட்டு விலகுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநராக இருந்த நிக்கி ஹேலி இந்தியாவிலிருந்து குடியேறிய இந்திய தம்பதியரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.