side Add

நிரந்­தர மீட்­சிக்­கான வழி வகை அவ­சி­யம்!!

கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை லட்­சத்­தைத் தாண்­டி­விட்­டது. 3 ஆயி­ரம் மில்­லி­யன் (300 கோடி) ரூபாய் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
பனை­யால் விழுந்­த­வனை மாடேறி மிதித்­த­தைப் போன்று, இன அழிப்­புக் கொடும் போரின் பாதிப்­பி­லி­ருந்து இப்­போ­து­தான் மெல்ல மெல்ல தலையை நிமிர்த்த முயற்­சிக்­கும் மக்­க­ளையே இயற்­கை­யும் மீண்­டும் மோச­மாக வஞ்­சித்­துள்­ளது.

இந்த மக்­கள் போரில் எல்­லா­வற்­றை­யுமே இழந்­த­வர்­கள். மிஞ்­சு­வ­தற்கு எது­வும் அற்ற வகை­யில் அனைத்­தை­யும் பறி­கொ­டுத்­து­விட்டு உயிரை மட்­டுமே கையில் ஏந்தி வந்­த­வர்­கள். ஏதுமற்ற சூனி­யத்­தி­லி­ருந்­தான் தமது வாழ்க்­கையை மீளக் கட்­டி­யெ­ழுப்­பி­னார்­கள். பழைய நிலைக்கு முழு­மை­யாக மீள்­வ­தற்­கி­டை­யில் பட்ட காலி­லேயே பட்­டி­ருக்­கின்­றது.

வன்­னி­யின் வரு­மா­னம் ஈட்­டும் முக்­கிய வழி­க­ளான விவ­சா­யம் மற்­றும் கால்­நடை வளர்ப்பு இரண்­டுமே மோச­ மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பாதிக்­கப்­பட்ட இரண்டு மாவட்­டங்­க­ளும் ஏற்­க­னவே இலங்­கை­யின் வறுமை மட்­டத்­தில் மிக உய­ரத்­தில் இருப்­பவை. வறுமை குடி­கொள்­வ­ தா­யின் வேலை­வாய்­பின்மை இங்கு அதி­கம் என்­ப­தைச் சொல்­லித்தான் தெரி­ய­வேண்­டும் என்­ப­தில்லை.

இப்­போது ஏற்­பட்­டுள்ள வெள்­ளம் இந்த நிலையை இன்­னும் மோச­மாக்­கவே செய்­யும். போரால் பாதிக்­கப்­பட்ட இந்த மாவட்­டங்­களை இயல்பு நிலைக்கு மீட்டு, மற்­றைய மாவட்­டங்­க­ளு­டன் வரு­மா­னத்­தி­லும் தொழில் வாய்ப்­பி­லும் சம­நி­லையை அடை­வ­தற்­கான சிறப்­புத் திட்­டம் எது­வும் கொழும்பு அர­சி­னால் கடந்த காலங்­க­ளில் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

உட­னடி உத­வி­கள், வீட்டு வச­தி­கள் என குறைந்­த­ள­வி­லான உத­வித் திட்­டங்­கள் கொழும்பு அர­சி­னால் முன்­னெ­டுக் கப்­பட்­டன என்­பதை மறுப்­ப­தற்­கில்லை என்­கிற போதும் போர் முடிந்து 10 ஆண்­டு­க­ளா­கி­யும் அந்த மக்­க­ளின் வாழ்க்­கைத் தரம் இலங்­கை­யின் ஏனைய மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்­திற்கு இணை­யா­ன­தாக மாறு­வ­தற்­கான சிறப்­புக் கவ­னம் எது­வும் கொழும்பு அர­சால் செலுத்­தப்­ப­ட­வில்லை.

மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் அத்­த­கைய கோரிக்­கை­கள் வெளிப்­ப­டை­யா­கவே எதிர்க்­கப்­பட்­டன. மாவட்­டத்­தின் உட்­கட்­டு­மா­னத்­தைத் தர­மு­யர்த்­தி­னால் போது­மா­னது என்­கிற எண்­ணத்­து­டன்­கூ­டிய பெருந் திட்­டங்­கள் மட்­டுமே அந்­தக் காலப் பகு­தி­யில் முன்­னெ­ டுக்­கப்­பட்­டன. அத்­த­கைய வீதி அபி­வி­ருத்தி மற்­றும் அரச கட்­ட­டங்­க­ளின் அபி­வி­ருத்­தி­க­ளால் மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்­து­வ­தற்­கான வாய்ப்­பு­கள் கிடைத்­தன என்று சொல்ல முடி­யாது. இதனை அரச புள்­ளி­ வி­வ­ரங்­களே சுட்டி நிற்­கின்­றன.

இந்த நிலை­யில் வெள்­ள­மும் அந்த மக்­க­ளைப் புரட்­டிப் போட்­டி­ருப்­பது பெரும் துன்­பி­யல் நிகழ்வு. வெள்ள இட­ரு­தவி என்­கிற பெய­ரில் தற்­கா­லிக உத­வி­க­ளின் மீது மட்­டும் கவ­னம் செலுத்­தப்­ப­டு­வது இப்­போ­தைக்கு அவ­சி­ய­மா­னா­லும், இந்த மக்­கள் தமது இயல்பு வாழ்­வுக்­குத் திரும்­பு­வ­தற்­கான சிறப்­புத் திட்­டங்­கள் செயற்­ப­டுத்­தப்­ப­டு­வது மிக அவ­சி­யம்.

அர­சி­யல் தலை­வர்­கள் உலங்­கு­வா­னூர்­தி­க­ளின் மூலம் காணும் வெள்­ளப் பாதிப்பு மட்­டுமே கணக்­கில் எடுக்­கப்­ப­ட­மு­டி­யா­தது என்­பது புரிந்­து­கொள்­ளப்­ப­ட­ வேண்­டும். புற்­று­நோய் போன்று ஏற்­க­னவே பர­வி­யி­ருக்­கும் பாதிப்­பை­யும் சேர்த்­துக் குண­மாக்­கும்­போ­து­தான் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்ட மக்­கள் தமது இயல்பு வாழ்­வுக்­குத் திரும்ப முடி­யும் என்­பதை தலை­வர்­கள் கவ­னத்­தில் எடுத்து துரி­த­மாக அதற்கு வேண்­டி­ய­வற்­றைச் செய்ய வேண்­டும்.

ஆட்­சி­யில் இருக்­கும் அர­சுக்கு இருக்­கக்­க­கூ­டிய ஆகக் கூடு­தல் கால­மான ஒன்றரை ஆண்­டு­க­ளுக்­குள்­ளா­வது அத­னைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­கள் மிக அவ­சி­யம் என்­ப­தை­யும் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.

You might also like