நீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

“நாயின் கழிவுகளைக் கூட, என்னை அவர்கள் அள்ள வைத்தனர்” என்று,  நீதிபதியின் மனைவியை சுட்டுக் கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தியா டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணகாந்த் சர்மா என்பவரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், நீதிபதியின் மனைவி (வயது 38) மற்றும் மகன் (வயது 18) ஆகியோர் மீது, கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

நீதிபதியின் மனைவி மற்றும் மகன் ஆகியோர், பொலிஸ் உத்தியோகத்தரை அழைத்துக் கொண்டு,காரில் சென்ற போது இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் நீதிபதியின் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

“அவர்கள் பிசாசுகள். அதனால் சுட்டுக் கொன்றேன். மிகவும் அசிங்கமானவர்கள். என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். நாயின் கழிவுகளை அகற்றக் கூட என்னைப் பயன்படுத்தினார்கள். அவர்களைப் பொறுத்த வரை – நாயும் பொலிஸ்காரர்களும் ஒன்று தான்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

You might also like