பழைய புடவையை புதிதாக மாற்றுவது எப்படி?

* உங்களிடம் இருக்கும் அழகான புடவையை அதிக நாட்கள் உடுத்திவிட்டது போன்ற அலுப்பு ஏற்பட்டால், அந்த பழைய புடவைக்கு புதிய ‘லுக்’ கொடுக்கலாம். புடவையின் ஓரத்தில் இருக்கும் டிசைனை அப்படியே வெட்டி எடுத்துவிட்டு, பதிலாக புடவையின் உள்ளே இருக்கும் கலருக்கு பொருத்தமான நெட் பாப்ரிக் ஒன்றை தேர்ந்தெடுத்து இணைத்து விடுங்கள். அந்த புதிய டிசைனுக்கு ஏற்ப சட்டையிலும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* உங்களிடம் பழைய பிளைன் புடவைகள் இருந்தால், அதில் உங்களுக்கு பிடித்தமான புதிய டிசைனை உருவாக்கலாம். அது ராஜபுத்ர பிரிண்டாகவோ, ஸ்கிரீன் பிரிண்டாகவோ இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் டிசைன் அழகாக இருந்தால், உங்கள் புடவைக்கு புதுமையான தோற்றம் கிடைத்து விடும்.

* விலை உயர்ந்த பழைய காஞ்சிபுரம் பட்டு இருந்தால் அதன் பார்டர் மற்றும் முந்தானையை வெட்டி எடுத்துவிட்டு அதன் கலருக்குப் பொருத்தமான வெல்வெட் துணியை இணைத்தால், மீண்டும் சில வருடங்கள் புதுமையாக அதனை உடுத்தலாம்.

* ஆடை கண்காட்சி களுக்கு அடிக்கடி செல்லுங்கள். அங்கு உங்களை கவர்ந்த டிசைன்களை காணமுடியும். டிசைனர்கள் ஆடைகளில் இணைக்கும் மணிகள் போன்ற பொருள்களை வாங்கும் கடைகளுக்கும் செல்லுங்கள். அந்த இணைப்பு பொருள்களை வாங்கி, உங்கள் பழைய புடவையில் உங்களை கவர்ந்த புதிய டிசைன்களை உருவாக்குங்கள். அது உங்கள் உடைகளுக்கு அழகான புதிய தோற்றத்தை தரும். பாராட்டையும் பெற்றுத் தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close