side Add

பாடசாலைக்கு விடுமுறை வழங்கியும் பயனில்லை!!

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு தைப்பொங்கலுக்காக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும், தனியார் கல்வி நிலையங்கள் எதுவும் மூடப்படவில்லை. இதனால் மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்ல நேரிட்டது.

பாடசாலைகளுக்கு விடுமுறை எனில், தனியார் கல்வி நிலையங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும். ஆனால் தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் இன்று முழுநாளும் இயங்கின. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருக்கவில்லை.

இதேவேளை மாலை 6.00 மணிக்குப் பின்னர் தனியார் கல்வி நிலையங்கள் இயங்கக்கூடாது என அரசினால் அறிவிக்கப்பட்ட நிலையில், தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சில தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6.00 மணிக்குப் பின்னர் இரவு வகுப்புகள் நடாத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like