பாதத்தில் வரும் வெடிப்புகள் நீங்க…!!

வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வெடிப்புக்கள் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.

எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைக் கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும்.

இரவில் மிதமான சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.

முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்க்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள்.தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.

மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.

கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மா போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.

பப்பாளி பழத்தை பிசைந்து எலுமிச்சை பழச்சாறு கலந்து பாதங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் வெடிப்பு குறையும்.

You might also like