பாதுகாப்பை அதிகரிக்க முடியாது- பொலிஸ் மா அதிபர்

0 440

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளை முன்னர் இருந்த அளவுக்கு அதிகரிக்க முடியாது என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் அளவை அதிகரிக்குமாறு முன்னாள் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

You might also like