பிரியங்கா சோப்ராவுடன் இணையும் இசைபுயல்?

0 392

முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் பிரியங்கா சோப்ரா. இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இவர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக் கொண்ட படத்தைத் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ‘இன் த பிரெசன்ஸ் ஆஃப் ஜீனியஸ்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்தப் படம் லாஸ் வேகாஸில் உள்ள ஜே.பி.எல். ஸ்டூடியோவில் எடுக்கப் பட்டுள்ளது.

பிரியங்கா ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஆக இவர்கள் இருவரும் இணைந்து ஏதேனும் ஹாலிவுட் படத்தில் வேலை செய்யக் கூடும் என்கிறார்கள் ரசிகர்கள். இருப்பினும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இதுதவிர, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள சர்கார் வரும் தீபாவளிக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது

You might also like