புத்தகப் பையில் நாகபாம்பு – அதிர்ச்சியடைந்த மாணவன்!!

புத்தகப் பையில் இருந்த உணவுப் பொதியை எடுக்க முயன்ற மாணவன் வெளிவந்த நாக பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் தங்காலைப் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் நடந்துள்ளது.

பாம்பைக் கண்ட மாணவன் உடனடியாக வகுப்பாசிரியருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

விரைந்து செயற்பட்ட ஆசிரியர், பையை மூடி அதனை வகுப்பறைக்கு வெளியில் எடுத்துச் சென்று பாடசாலையின் பாதுகாப்புக்கு இருந்த பெற்றோரிடம் ஒப்படைத்தார்.

பெற்றோர் பையை சோதனையிட்ட போது, அதில் 3 அடி நீளமான நாக பாம்பு இருந்துள்ளது. அதனை அவர்கள் பாடசாலைக்கு வெளியே உள்ள காட்டில் விட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

You might also like