பொலிஸாரின் சட்ட நடவடிக்கை மந்தம் – நல்லூர் பிரதேச சபையில் சுட்டிக்காட்டு!!

குற்றங்கள் நடைபெறும் போது, பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டாலும், அவர்கள் தாமதமாகவே சம்பங்களைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கின்றனர் என்று நல்லூர் பிரதேச சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சிவலோசன் தெரிவித்ததாவது,

திருநெல்வேலியில் உள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அங்கு ஏற்படட மோதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் அங்கு வரவில்லை.

பாடசாலைக்கு அண்மையில் உள்ள இராணுவத்தினர் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்தனர். அதன் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்..இவ்வாறான நிலையில் தான் எமது சட்டம் ஒழுங்கு உள்ளது.

பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நாம் பொலிஸாரை அவரசத்துக்கு அழைத்த போதும், வரவில்லை. இராணுவம் அழைத்து எமது பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நிலையில் தான் இங்கு சடடம் ஒழுங்கு காணப்படுகின்றது. இப்படியானால் எவ்வாறு குற்றங்கள் குறையும் என்றார்.

You might also like