போதையில் இருந்த இளம் பெண்ணுக்கு யாழ். நீதிமன்று பிறப்பித்த உத்தரவு!

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் மன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கோப்பாய் பொலிஸார் இன்று குற்றப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட பெண் நீதிமன்றில் தோன்றவில்லை. அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இருபாலைச் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அண்மையில் விபத்துக்குள்ளாகினர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விபத்தில் சிக்கியவர்களை மக்கள் மீட்டபோது இளம் பெண்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை அவதானிக்கப்பட்டது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்ட்டது. கோப்பாய் பொலிஸார் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூலம் பெண்களை மீட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்ற இரு பெண்களும் நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் மீது மது போதையில் வாகனம் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக இளம் பெண் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை யாழ். நீதித் துறையில் இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close