போயா தினத்தில் சாராயம் விற்றவருக்கு நேர்ந்த கதி!!

போயா தினத்தன்று சாராயம் விற்பனை செய்த கைதடி வாசிக்கு யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்றில் 7 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

கைதடிப் பகுதியில் 180 மில்லி லீற்றர் சாராயத்தை விற்பனை செய்த நபர் மதுவரி நிலைய அதிகாரிகளால் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டார்.

குறித்த நபருக்கு எதிராக வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்ய்ப்பட்டு, விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து தண்டம் விதிக்கப்பட்டது.

You might also like