மகு­டம் சூடி­னார் சிமோனா கேலப்

பிரென்ஞ் பகி­ரங்­கத் தொட­ரில் பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் கிண்­ணம் வென்­றார் ருமே­னிய வீராங்­கனை சிமோனா கேலப்.

நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பன்­னாட்­டுத் தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டத்­தில் உள்­ள­வ­ரான கேலப்பை எதிர்த்து தரப்­ப­டுத்­த­லில் 10ஆவது இடத்­தில் உள்­ள­வ­ரான அமெ­ரிக்க வீராங்­கனை ஸ் ரீபன்ஸ் மோதி­னார்.

மூன்று செற்­க­ளைக் கொண்டதாக ஆட்­டம் அமைந்­தது. முத­லா­வது செற்றை 4:6 என்ற அடிப்­ப­டை­யில் இழந்­தார் கேலப். இத­னால் அடுத்த இரண்டு செற்­க­ளி­லும் வெற்­றி­பெற வேண்­டும் என்ற நெருக்­கடி கேலப்­புக்கு ஏற்­பட்­டது.

இரண்­டா­வது செற்றை கடும் போராட்­டத்­துக்கு மத்­தி­யில் 6:4 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்­றி­னார் கேலப். மூன்­றா­வது செற் 6:1 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கேலப்­பின் வச­மாக அவர் 2:1 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றார்.

பன்­னாட்­டுத் தரப்­ப­டுத்­த­லில் முத­லி­டத்­தில் உள்­ள­வ­ரான கேலப் கைப்­பற்­றிய முத­லா­வது பகி­ரங்­கத் தொடர் இது­வா­கும். இதை­ய­டுத்து அவ­ருக்­குப் பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன. அத்­து­டன் அடுத்த சில மாதங்­க­ளுக்கு முத­லி­டத்­தில் தொட­ரக்­கூ­டிய வாய்ப்­பை­யும் இந்த பிரென்ஞ் கிண்­ணம் கேலப்­புக்கு வழங்­கி­யுள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close