மக்களின் தாகம் தீர்க்கும் புரட்சி விளையாட்டுக் கழகம்!!

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக வவுனியா புளியங்குளம் பகுதியில் பொது மக்களின் தாகத்தை தணிப்பதற்காக மோர் வழங்கப்பட்டு வருகிறது.

புளியங்குளம் சுகாதாரபிரிவின் அனுசரணையுடன், புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகத்தினால் குறித்த மோர் வழங்கும் நடவடிக்கை கடந்த ஒருவாரகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

புளியங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணணன் ஆலயத்துக்கு அருகில் தண்ணீர்ப்பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு “மோர்” வழங்கப்பட்டு வருகின்றது.

You might also like