மக்கள் பிரதிநிதிகளுடன் ஆளுநர் அவசர சந்திப்பு!!

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று சந்தித்தார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் சந்திப்பு நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலமைகள் , அவற்றினூடாக முன்னெடுத்துள்ள மக்கள் நல செயற்பாடுகள் மற்றும் அவற்றை மேற்கொள்ளும் போது முகம்கொடுக்கும் சவால்கள் , பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

You might also like