மசூதி அருகே குண்டு வெடிப்பு- பொலிஸார் உட்பட 9 பேர் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள சூபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பொலிஸார் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2- ஆவது நாளாக நோன்பு தொழுகைகள் டேட்டா தர்பார் மசூதியில் நடந்தது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருக்கும் அந்த மசூதி முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

அதையும் மீறி இன்று காலை 8.45 மணிக்கு அந்த மசூதி குண்டு வெடிப்பு நடந்தது.

பயங்கர சத்தத்துடன் வெடித்த அந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி சம்பவ இடத்திலேயே 5 பொலிஸார் உட்பட 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like