மடுவில் தூயகப்பகுதி அமைக்க அடிக்கல்!!

மன்னார் மடு மாதா திருத்தலத்தில் மருதமடுத் திருத்தாயார் எழுந்தருளியிருக்கும் தூயகப் பகுதியை விசாலமாக்கும் பணித்திட்டத்தின் கீழ் புதிய தூயகப்பகுதிக்கு அடிக்கல் நடப்பட்டது.

வீடமைப்பு, கட்டுமானப்பணி, கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து அடிக்கல்லை நட்டார்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ. மோகன்றாஸ், கலாச்சார அமைச்சின் செயலாளர் பேணாட் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை, மடுத்திருத்தலப் பரிபாலகர் அருட்பணி.ச.ஜொ.பெப்பி சோசை, உள்ளிட்டவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like