மனைவியின் தலையுடன்- பொலிஸில் சரணடைந்த கணவன்

மனைவியின் தலையை அறுத்துக் கொலை செய்து விட்டு பொலிஸில் சரனடைந்த கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வீலெர் பகுதியில் சம்பவம் நடந்துள்ளது.

உசேன் என்பவர் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. அம்மாஜியின் கழுத்தை அறுத்த உசேன், துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக் கொண்டு நேரடியாகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார் உசேனைக் கைது செய்ததுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like