side Add

மன்னாரில் மேலும் மனித எலும்புக் கூடுகள்!!

மன்னார் நகர் மத்திய பகுதியில் சதொசக் கட்டட வளாகத்தில் இன்று 225 ஆவது நாளாக வளாகத்தின் வெளிப்பகுதிகள் அனைத்தும் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வார காலமாக வளாகத்தில் அடையாளப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தப்படும் பணிகள் குறைக்கப்பட்டு விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்றன

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் சதொச ச வளாகத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதி உள்ளூர் கடைத் தொகுதிக்குச் செல்லும் ஒரு பகுதி மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

விரிவுபடுத்தப்படும் பகுதிகளிலும் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தற்போது வரை 282 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் 277 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றது.

You might also like