side Add

மரம் அறுக்கும் இயந்திரத்தால் அறுத்துக் கொல்லப்பட்ட ஜமால்-வெளியானது அதிர்ச்சித் தகவல்!!

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் பத்திரிக்கையாளர் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்ட போது பதிவான ஒலிப்பதிவின் மொழிப்பெயர்ப்பு அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி சுவாசிக்க முடியவில்லை எனக் கூறியதே கஸோக்கி பேசிய கடைசி வார்த்தையாகப் பதிவாகியுள்ளது. படுகொலை அரங்கேறிய நேரத்தில் பல முறை சவுதி தூதரகத்தில் இருந்தவர்களின் செல்போன்களில் அழைப்புக்கள் வருவதும், அங்கு நடந்த படுபாதகச் செயல்களை அழைத்தவரிடம் விவரிப்பது போன்றும் ஒலிப்பதிவில் பதிவாகியுள்ளது.

கஸோக்கியின் உடலை மரம் அறுக்கும் மின்சார இயந்திரத்தைக் கொண்டு அறுக்கும் சத்தமும், அந்த சத்தம் வெளியில் கேட்காமலிருக்க பின்னணியில் இசையின் சத்தத்தை கூட்டுவதும் இடம்பெற்றுள்ளன.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் வாசிங்டன் போஸ்ட் பத்திரிக்கையாளர் கஸோக்கியைக் கொல்ல உத்தரவிட்டதாகக் சிஐஏ தெரிவிக்கும் நிலையில், அவர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு ஏதும் சுமத்தாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதி வந்த  பத்திரிக்கையளர் ஜமால் கஸோக்கி கொல்லப்பட்டதை முதலில் மறுத்த சவுதி அரசு தற்போது அதை ஒப்புக் கொண்டுள்ளது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்திற்குள் நுழைந்த கஸோக்கி அடுத்த 7 நிமிடத்திற்குள் கொல்லப்பட்டு விட்டதாகவும் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தினை அடுத்து கஸோக்கியைப் போன்று ஒருவர் உடையணிந்து வெளியே செல்வது போன்ற வீடீயோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

You might also like