side Add

மழை கடந்தும்- வெள்ளம் வற்றவில்லை!!

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 15 நாள்களை கடந்துள்ள போது முகமாலை பகுதியில் இன்னமும் வீடுகளுக்கு செல்ல முடியாதவாறு வெள்ளம் நிரம்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாவட்டம் தளுவிய ரீதியில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

ஒரு வாரம் கழித்து மழை வெள்ளம் வற்றிய நிலையில் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு சென்று அழிவுகளை நிவர்்த்தி செய்து வருகின்றனர்.

பச்சிலைப்பள்ளி முகமாலை தெற்கு பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக அந்த பகுதி உள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. நிரந்தர வீடுகளுக்கும் வெள்ளம் உட்புகுந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது மழை வெள்ளம் வற்றாத காரணத்தால் சுமார் 7 குடும்பங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

தற்போதும் அந்த தற்காலிக வீடுகள் வெள்ளத்தால் நிரம்பிக் காணப்படுகின்றன.

அந்த குடும்பங்கள் தற்போது உறவினர்கள் மற்றும் அயலவர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

You might also like