மின்சாரம் தாக்கி- அறுவர் உயிரிழந்த சோகம்!!

குளத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் ஒரு சிறுவன் உட்பட ஆறு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இந்தியா அஸ்ஸாம் மாநிலம், நகோன் மாவட்டம் உத்தர் கத்தோல் கிராமத்தில் நடந்துள்ளது.

குளத்தில் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை அறிந்து கொள்ளாத சிலர் குளத்தில் மீன் பிடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் சென்றுள்ளனர்.

இதில் சிக்கிய அறுவர் மின்சாரம் தாக்கி குளத்தில் தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் குளத்தைச் சுற்றியிருந்த மேலும் 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மின்சார கம்பி அறுந்து விழுந்ததாகக் கூறியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்ற கோபத்தில் கிராம மக்கள் அங்குள்ள மின்சாரத்துறை அதிகாரியின் வீடு மற்றும் காரை அடித்து நொருக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like