முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் காயம்

0 105

நுவரெலியா, கொக்கிராவ பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

நுவரெலியா கட்டுமான பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் நுவரெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

விபத்து தொடர்பாக  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like