யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் சுவிஸில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த தவசீலன் சபாநாதன் (வயது 50 ) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி முதல் இவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒரு வாரத்துக்குப் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவரின் மர்மமான உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like