ரஞ்சன் ராமநாயக்கவுக்கு -நீதிமன்றம் அழைப்பு!!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் 21 இல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் என் ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்ததார்.

இது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் தெரிவித்து ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா மற்றும் சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் ஆகியோரினால் உயர் நீதிமன்றத்தில் இரு வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று இடம்பெற்றது. இதன்போதே 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உத்தரவிடப்பட்டது.

You might also like