வறட்சியால் வெளிவந்த 3,400 வருட பழமையான அரண்மனை!!

ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான அரண்மணை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக முக்கிய நதியான திக்ரிஸ் நதி வறண்டு போயுள்ளது.

இதனால் அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது.

அந்த நதியில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய அணையான மொசூல் அணை வறண்டு போயுள்ளது. அணை வறண்டு போனதை தொடர்ந்து இதுவரை நீருக்குள் மூழ்கியிருந்த அரண்மணை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது.

இந்த அரண்மனை 3,400 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அரண்மனையின் தொன்மை மற்றும் வரலாறு பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக குர்திஷ் மற்றும் ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

You might also like