வலி.வடக்கு நிலமைகளை ஆராய்ந்தார் ஆளுநர்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் பல்வேறு நிலைகளையும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நேரடியாக ஆராய்ந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பில் சென்ற ஆளுநர் அந்த பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடினார்.

பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்குச் சென்று பாடசாலை அதிபர்கள், மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

You might also like