வாக்காளர் பதிவு விண்ணப்ப விநியோகம் ஆரம்பம்!!

இந்த வருடத்தில் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் சேகரிக்கப்படும் நடவடிக்கை எதிர்வரும் மாத முற்பகுதியில் ஆரம்பிக்கப்படும்.

16 வயது முதல் 18 வயது வரையானோரின் பெயர் விபரங்களை குறித்த விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விபரங்களும் விண்ணப்பப்படிவத்தில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like