விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!!

வானும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து கெக்கிராவை, மடாத்துகம பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றது.

விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like