விழுந்து நொருங்கிய இரு விமானங்கள்- 23 பேர் உயிரிழப்பு!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் ஒரு விமானமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர். திடீரென அந்தவிமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் 17 பயணிகள் 2 விமானிகள் உள்ளிட்ட அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உடல்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமான விபத்தால் காட்டுப் பகுதிக்குள் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை நடந்து வருகிறது.

விபத்து நடந்த மலைப் பகுதி 8,038 அடி உயரம் கொண்ட பனிப்பிரதேசம் ஆகும். இரு விமானங்களும் உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சொந்தமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close