விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்த யானை- கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!!

முல்­லைத்­தீவு – – ஒட்­டு­சுட்­டான் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட சம்­ம­ளங்­கு­ளம் பகு­தி­யில் விவ­சா­யக் காணி­யிலுள்ள கிணற்றில் காட்­டு­யானை ஒன்று விழுந்து உயி­ரி­ழந்­துள்­ளது.

விவ­சா­யி­கள் விவ­சா­யம் செய்­யும் கிணற்­றில் கடந்த ஐந்து நாள்­க­ளுக்கு முன்­னர் குறித்த யானை இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் சம்பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்­டும் எந்தவித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை.

சம்­ம­ளங்­கு­ளம் கிரா­மத்­தில் காட்டு யானை­க­ளின் தொல்லை அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றது. த

ற்­போது ஏற்­பட்­டுள்ள வறட்சி கார­ண­மாக தண்­ணீ­ருக்­காக யானை அலைந்து திரிந்து கிணற்­றில் வீழ்ந்­தி­ருக்­க­லாம் – என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர்.

You might also like