side Add

விவாகரத்துத் தகவலை அறிவிக்க- சவுதி அரசு புதிய வசதி!!

விவாகரத்து வழக்கில் பெண்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்பும் சவசதியை ஏற்படுத்திக் கொடுக்க வுதி அரேபியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சவுதி அரோபியாவில் ஆண்களில் சிலர் மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றில் வழக்குத் தொடரும் போது மனைவியிடம் தெரிவிப்பது இல்லை. இதனால் பெண்களின் உரிமையும் அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக சீரமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன் அடிப்படையில் அங்கு பெண்கள் உரிமையை நிலை நாட்ட புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவாகரத்துப் பிரச்சினையில் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீசு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like