வீதியைச் சீரமைக்கக் கோரிக்கை!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதான வீதியைச் சீரமைக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்துக்கு உட்பட்ட கோணாவில் யூனியன்குளம் கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பால் சேதமடைந்துள்ளது.

வீதியில் பொருத்தப்பட்டிருந்த நீர் குழாய் (போக்கு) இரண்டாகப் பிழந்து காணப்படுகின்றது.

தற்போது அறுவடைக் காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களில் நெல் கொண்டு செல்ல முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

பாலத்தை மீளச் சீரமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டுள்ள போதும் இதுவரை வேலைகள் ஆரம்பிக்கப்பட வில்லை என்று மக்கள் குற்றஞசாட்டியுள்ளனர்.

You might also like