வெவ்வேறு விபத்துக்கள் – மாணவர் உட்பட மூவர் காயம்!!

0 55

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வெவ் வேறு சாலை விபத்துக்களில் சிக்கி இரு மாணவர்கள் உட்பட மூவர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கள் இன்று இடம்பெற்றன.

விபத்தில் காயமடைந்த இரு மாணவர்கள், ஒரு பெண் ஆகிய மூவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை முடிந்து வீடுதிரும்பிய மாணவி பாதசாரிகள் கடவையில் கடந்த போது ஏ 9 முதன்மைச் சாலையில் வந்த உந்துருளி மோதியதில் காயமடைந்தார் .

பாடசாலை முடிந்து வீடு வந்த 14 வயது மாணவன் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்ற வேளையில் மீசாலை புத்தூர் சந்தியில் முதன்மைச் சாலையில் சென்ற பெண் செலுத்தி வந்த உந்துருளி மோதியதில் காயமடைந்தார். உந்துருளியைச் செலுத்திச் சென்ற சாவகச்சேரி கச்சாய் சாலையைச் சேர்ந்த பெண்ணும் காயமடைந்தனர்.

You might also like