வைத்தியர்கள் அரை மணி நேரம் போராட்டம்!!

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் இன்று வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“வடக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கு எல்லாம் நாறல் மருந்து ராஜிதவிற்கு சிங்கப்பூரில் சிகிச்சையா?“ உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுடன் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like