ஸஹ்ரான் உயிரிழந்து விட்டார்- மரபணு பரிசோதனையில் உறுதி!!

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார் என்று மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் ஸஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என்று அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்கொலைத்தாரியான சஹ்ரானின் மகள், சகோதரி ஆகியோரின் மரபணுக்களின் மாதிரிகளைக் கொண்டு, கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையின் அடிப்படையில், உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like