மனைவி-துணைவி!!

பகுதி-29

கரு­ணா­நி­தி­யின் தந்­தை­முத்­து­வே­லருக்கு மூன்­று­ ம­னை­விமார். முதல் இரு மனை­வி­ய­ரும் சாவடைந்துபோக, மூன்­றா­வ­தா­க­அஞ்­சு­கம் அம்­மை­யா­ரைத் தி­ரு­ம­ணம் செய்­தார். முத்­து­வே­ல­ருக்­கு­ பிள்­ளை­கள் மூன்று பேர்.

பெரி­ய­நா­ய­கம்,சண்­மு­க­சுந்­த­ரம் என்­ற­ பெண்­க­ளுக்­குப்­ பி­றகு மூன்­றா­வ­தா­க­ப் பி­றந்­த­வர் தான் க­ரு­ணா­நிதி. குடும்­பத்­தின் கடைக்­குட்­டி­ அ­வர். குடும்­பத்­தின் ஆண்­வா­ரி­சும் அவரே. கரு­ணா­நி­தி­ மு­த­லில் பத்­மா­ என்­ற­ பெண்­ணை­த் தி­ரு­ம­ணம் செய்­தார். பத்மாவின் மறை­வுக்­குப் பின்னர் தயா­ளு­ அம்­மா­ளைத் தி­ரு­ம­ணம் செய்­தார். அடுத்து ராஜாத்­தி­ அம்­மா­ளை­யும் கைப்­பி­டித்­தார்.

கரு­ணா­நி­திக்­கு ­ம­னை­வி­யர் மூவர்,மகன்மார் நான்­கு­பேர். மகள்மார் மூவர். முத்து,அழ­கிரி, ஸ்டாலின்,தமி­ழ­ர­சன் மற்­றும் செல்வி, தமிழ்,கனி­மொ­ழி­ஆ­கி­யோர் அவ­ர­து­ பிள்­ளை­கள். கரு­ணா­நி­தி­யை­ அ­ர­சி­ய­லுக்கு இழுத்­து­வந்­த­வர் பட்­டுக்­கோட்­டை­ அ­ழ­கி­ரி­சா­மி.­ அ­வ­ர­து­ பேச்­சாற்­ற­லால் கவ­ரப்­பட்­டார் கரு­ணா­நிதி. ஆத­லால் அவ­ர­து­ பெ­ய­ ரைத் ­த­ன­து­ ம­க­னொ­ரு­வ­ருக்­கு­ வைத்­தார். இதே­போன்­று­ ஏனைய பிள்­ளை­களின் பெயருக்­குப் பின்னாலும் வெவ்வேறு அர்த்­தங்கள் இருந்­தன.

ஒரு அர்த்தத்தின் அடிப்படையிலேயே
தமது பிள்ளைகளுக்குப் பெயர்
வைத்ததாகத் தெரிவித்திருந்தார் கலைஞர்
எண்­ப­து­க­ளில் கரு­ணா­நி­தி ­க­லந்­து­கொண்­ட­ வி­ழா­வொன்­றில் தனது குழந்­தை­க­ளுக்­குப் பெயர் சூட்டியமை­ பற்­றிக்­ குறிப்­பி­டு­கி­றார்.

“எனது குழந்­தை­க­ளுக்­குப்­ பெ­யர் வைப்­ப­தி­லும் என­து­ உ­ணர்­வு­க­ளை­ வௌிப்­ப­டுத்­தி­னேன். வீட்­டுக்­கா­க­ ஒ­ரு­ பெ­யர் வைத்­தேன். அது­ முத்து (தந்­தை­ முத்­து­வே­லர் நினை­வாக).நாட்­டுக்­கா­க­ ஒ­ரு ­பெ­யர் வைத்­தேன். அழ­கி­ரி­ என்று (நினை­வாக). உல­கிற்­கா­க­ ஒ­ரு­பெ­யர் வைத்­தேன். அது ஸ்டாலின் (ரஷ்ய கம்­யு­னிஸ்ட் தலை­வர் ஸ்டாலின் நினை­வாக) என்­று ­கு­றிப்­பி­டு­கி­றார்.

கரு­ணா­நி­தி, ­பத்­மா­வ­தி­ அம்­மாள் என்­ப­வரை­ மு­த­லா­வ­தா­க­ தி­ரு­ம­ணம் செய்­துகொண்­டார். இவர்­க­ளுக்­கு­ப் பி­றந்­த­ ம­கன் தான் மு.க. முத்து. இவர் தமிழ்த் திரைப்­ப­டங்­க­ளில் நடித்­தி­ருக்­கி­றார். பாட­லும் பாடி­யுள்­ளார். பத்­மா­வ­தி­ அம்­மாள் திரு­ம­ண­மா­ன­ சி­ல­ வ­ரு­டங்­க­ளி­லே­யே­ ம­ர­ணம் அடைந்­து ­விட்­டார். பிறகு, கரு­ணா­நிதி இரண்­டா­வ­தாக­ த­யா­ளு­ அம்­மா­ளை­த் தி­ரு­ம­ணம் செய்­துக் கொண்­டார். இவர்­க­ளுக்­கு மொத்­தம் நான்­கு­ கு­ழந்­தை­கள். மு.க. அழ­கிரி., மு.க. ஸ்டாலின், மு.க. தமி­ழ­ரசு­ மற்­றும் செல்வி. இதில்,மு.க. ஸ்டாலின் கரு­ணா­நி­தி­யில் அர­சி­யல் வாரி­சா­க­ செ­யற்­பட்­டு­ வ­ரு­கி­றார்.

தன்­னு­டன் நாட­கத்­தில் நடித்­த­ ரா­சாத்­தி­ அம்­மாள் (இவ­ருக்­கு இயற் பெயர் தர்­மாம்­பாள்) என்­ப­வ­ரைக் ­காந்­தர்­வ­ ம­ணம் புரிந்­து கொண்­டா­ராம் கரு­ணா­நிதி. இந்­தத் தம்­ப­தி­யி­ன­ருக்­கு­க் க­னி­மொ­ழி­ என்­று­ ஒரு ம­கள் உள்ளார்.இந்­தத் திரு­ம­ணம், குழந்­தை­ பி­றப்­பு­ எல்­லாம் வௌியு­ல­குக்­குத்­ தெ­ரிந்­தும்,தெரி­யா­ம­லும் ரக­சி­ய­மா­க­ வைக்­கப்­பட்­டன.

கனி­மொ­ழி­ இந்­தி­ய­ வ­ர­லாற்­றில் மிகப்­பெ­ரி­ய­ ஊ­ழ­லா­கக் குறிப்­பி­டப்­ப­டும் 2ஜி அலைக்­கற்­றை­ விற்­ப­னை­யில் மேற்­கொள்­ளப்­பட்­ட­ ஊ­ழ­லில் முக்­கி­ய­ குற்­ற­வா­ளி­யா­க­க் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தார். கனி­மொ­ழி ­தற்­போது இந்­தி­ய­ மாநி­லங்­கள் அவை­ உ­றுப்­பி­ன­ராக இருக்­கி­றார். அர­சி­யலில் மட்­டு­மன்­றி, ­க­னி­மொ­ழிக்கு இலக்­கி­யத்­ து­றை­யி­லும் ஆர்­வம் இருக்­கி­றது. இவ­ர­து­ம­கன் ஆதித்­யா­வின் பெய­ரை­தான் தான் ‘சன் நெட்­வர்க்’ நிறு­வ­னம் தன­து­ கு­ழந்­தை­க­ளுக்­கா­ன ரி.வி அலைவரிசைக்குப்­ பெ­ய­ரா­க­ச் சூட்­டி­யது.

இந்திய திருமணச் சட்டமும்
ஒருவருக்கு ஒருத்தியே என்பதை
வலியுறுத்துமொன்றே
இந்­தி­யா­வின் திரு­ம­ண­ச் சட்­டம், ஒரு­வ­னுக்கு ஒ­ருத்­தியே­ எனக் கூறு­கி­றது. அதா­வ­து­ஒ­ரு­ ஆண்,ஒரு ­பெண் து­ணை­யு­டன் தான் திரு­ம­ண­ பந்­தத்­தில் வாழ­வேண்­டும் என்­று ­கட்­டா­யப்­ப­டுத்து­கிறது. இல்­லை­யேல்,தன­து ­து­ணை­யை­ வி­வா­க­ரத்­து­ச் செய்­து­விட்­டாலோ,அல்­ல­து­ துணை இறந்­து­விட்­டா­லோ­ மீண்­டும் திரு­ம­ணம் செய்­துகொள்­ள­லாம் என்­றும் இந்­தி­ய­ தி­ரு­ம­ணச் சட்­டம் கூறு­கி­றது. 1955ஆம் ஆண்டு இந்­தி­யா­வின் திரு­ம­ண­ சட்­டம் நடை­மு­றைக்­கு ­வந்­தது.

உல­கெங்­கும் முஸ்­லீம் திரு­ம­ணச்­சட்­டம் தவிர்த்­து,­ ஒ­ரு­வ­னுக்­கு­ ஒ­ருத்­தி­ என்­ற­ சட்­ட­மே­ ந­டை­மு­றை­யில் உள்­ளது. இருப்­பி­னும், வளர்ந்­த­ நா­டு­க­ளில் திறந்­த­ தி­ரு­ம­ண­ ந­டை­மு­றை­கள் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­ட­ ச­மூ­க­ வி­ழு­மி­யங்­க­ளா­கக்­ கா­ணப்­ப­டு­கின்­றன. இருப்­பி­னும், அமெ­ரிக்கா, யப்­பான் போன்­ற­ வ­ளர்ந்­த­ நா­டு­க­ளின் தலை­வர்­கள் திரும­ணத்­துக்கு­ மீ­றி­ய­ தொ­டர்­பு­க­ளைக் கொண்­டி­ருக்­க ­மு­டி­யாது. அவ்­வா­றா­ன­தொ­ரு­ வி­ட­யம் ஒழுக்­கக்­கே­டா­ன­தா­கக் கரு­தப்­பட்­டு­ தார்­மீ­க­ அ­டிப்­ப­டை­யில் பத­வி­ வி­ல­க­ வேண்­டி­ய­தா­ன­ நி­லை­மை­கள் அந்­த­ நா­டு­க­ளில் காணப்­ப­டு­கின்­றன.

அமெ­ரிக்­க­ அ­தி­பர் கிளிங்­ரன் திரு­ம­ணத்­துக்­குப் புறம்­பா­க­மொ­னிக்­கா ­என்­ற­பெண்­ணு­டன் தொடர்­பு­ வைத்­தி­ருந்­தார் என்ற குற்றச்சாட்டில்­ வி­சா­ர­ணை­க­ளை ­ எ­திர்நோக்­க­வேண்­டி­யி­ருந்­தது. அதே­போல் யப்­பான் பிர­த­மர் ஒரு­வர் பத­வி­ வில­க­ நே­ரிட்­டது. ஆனால், ஒரு­வ­னுக்­கு­ ஒ­ருத்­தி­ என்­ற­ ச­மூ­க­ வி­ழு­மி­யங்­க­ளைக் ­க­டு­மை­யா­கக் கடைப்­பி­டிக்கின்ற­ கீ­ழைத்­தே­ய­ நா­டு­கள், குறிப்­பா­க­ தென்­னா­சி­ய­ நா­டு­க­ளின் தலை­வர்­கள், சமூ­கப் ­பி­றழ்வான­ தி­ரு ­ம­ண­ பந்­தங்­க­ளைக் கொண்­டி­ருக்க முடி­கி­றது. இது ஒரு­ மு­ரண் யதார்த்­த­மா­கும்.

கரு­ணா­நி­தி­ த­ன­து­மு­தல் மனை­வி ­பத்­மா­வதி இறந்­த­பி­ற­கு ­தான், தயா­ளு ­அம்­மாளைத்­ தி­ரு­ம­ணம் செய்­து­கொண்­டார். என்­றா­லும். தயா­ளு­ அம்­மாள் உயி­ரு­டன் இருக்­கும்போதே,அறு­ப­து­க­ளில் அர­சி­யல் பரப்புரையில் ஈடு­ பட்­டு­வந்­த­போது ராஜாத்­தி­ அம்­மாள் மீது­கா­தல் வசப்­பட்­டு­த் தி­ரு­ம­ணம் செய்­து­கொண்­டார். இத­னை தி.மு.கவி­ன­ரும் தமிழ்ச் சமூ­க­த்தினரும் ஏற்­றுக்­கொண்­ட­னர். பெரி­யார் தன­து­ மு­தி­ய­ வ­ய­தில் மணி­யம்­மை­யைத் ­தி­ரு­ம­ணம் செய்து கொண்­ட­தால் தான், திரா­வி­டக்­க­ழ­கத்­தில் இருந்­து­ பி­ரிந்­து­ தி­ரா­வி­ட­ முன்­னேற்­றக் கழ­கத்­தை­ அ­றி­ஞர் அண்­ணா­ ஆ­ரம்­பித்­தார் என்­பதை இங்­கு­ க­வ­னத்­தில் கொள்­ள­வேண்­டும்.பின்னர், கரு­ணா­நி­தி ­தி­ரா­வி­ட­ முன்­னேற்­றக்­க­ழத்­தின் தலை­வ­ரா­னார். அவர் தி­ரு­ம­ணத்­துக்­குப் பு­றம்­பா­ன­ உ­ற­வை­வைத்­தி­ருந்­தார். ஆனால்,அது­ தொண்­டர்­க­ளா­லும், தலை­வர்­க­ளா­லும், மக்­க­ளா­லும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

மனைவி உயிருடன் இருக்கும்போது மற்றொரு பெண்ணைத் திருமணம் செய்தமை குறித்து கருணாநிதியின் வாயை ஊடகவியலாளர்கள்
கிண்டிக் கிளறுவது வழக்கம்
இந்­த­வி­ட­யம் தொடர்­பாக,பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கரு­ணா­நி­தி­யை­ அவ்­வப்­போ­து­கேள்­வி­கள் கேட்­டு­த் தொல்­லைப்­ப­டுத்­து­வார்­கள். ஒரு­ த­ட­வை ரா­சாத்­தி­யம்­மா­ள் யார்? ஏன்­று ­க­ருணா­நி­தி­யி­டம் கேட்­கி­றார்­கள். அதற்கு,‘‘ராசாத்­தி­ அம்­மாள், என­து­ம­கள் கனி­மொ­ழி­யின் தாயார்”­என்­று­ ப­தில் அளித்­தி­ருக்­கி­றார். நேர­டி­யா­க­ அ­வர் என் மனை­வி­ சொல்­ல வில்லை.பின்னர் ஒரு­த­ட­வை­ பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் கேட்­ட­போ­து­சொன்­னார், ”தயா­ளு­அம்­மாள் என­து­ம­னைவி. ராசாத்­தி­ அம்­மாள் என­து­ துணைவி. இங்­கு­ து­ணை­வி­ என்­ற­ த­மிழ்ச் சொல்லுக்குப் ­பு­தி­ய­ வி­ளக்­கம் கிடைத்­தது.

தமிழ் அக­ரா­திக்­கு ­ஒ­ரு­ பு­தி­ய­ அ­ருஞ்­சொற்­பொ­ருள் விளக்­கம் கிடைத்­தது. அது­நாள்வரை­ து­ணை­வி­ என்­றா­லும், மனை­வி ­என்­றா­லும், ஒன்­றே­தான் என்­று­தான் தமி­ழில் அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்­டது. கரு­ணா­நி­தி­யின் விளக்­கத்­தால் ம­னை­வி­யும், துணை­வி­யும் ஒன்­றென்­றி­ருந்­த­ நி­லை­ மாற்­றம் பெற்­று­ ம­னை­வி­ வேறு, துணை­வி ­வே­று­என்­ற­அர்த்­தம் கிடைத்­தது. ஆக,கரு­ணா­நி­திக்­கு ­த­யா­ளு­ அம்­மா­ள், ம­னைவி (Wife) இராஜாத்­தி­ அம்­மாள் து­ணைவி (Companion). இத­னை­த் தொண்­டர்­க­ளும்,கழ­கத் தோழர்­க­ளும்,தமி­ழர்­க­ளும் ஏற்­றுக் கொண்­டார்­கள்.
(தொட­ரும்)

You might also like