பெரும் சோகமான சம்பவம்- சுவர் இடிந்து விீழ்ந்து- 9 சிறுவர்கள் உயிரிழப்பு!!

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் உள்ளது குலாம் சர்வார் ஷம்பானி கிராமம். அந்தக் கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த பொலிஸார், சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like