136 பயணிகளுடன் பயணித்த விமானம் ஆற்றில் வீழ்ந்தது!!

அமெரிக்காவில் ஓடு பாதையில் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடாவில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் வீழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் கியூபாவிலிருந்து, நவல் என்ற விமான நிலையத்துக்கு 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு போயிங் 737 விமானம் வந்து கொண்டிருந்தது.

நவல் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, புளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் வீழ்ந்தது.

எனினும், இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணிகளுக்கு சேதம் இல்லாதபோதும் விமானத்தின் இயக்கத்தை நிறுத்த முடியவில்லை.

இதற்கான பணிகளில் பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like