14 கைதிகள் உயிரிழப்பு!!

சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 14 கைதிகள் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இடமாற்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் உணவாக வழங்கப்பட்டன.

அவற்றை உட்கொண்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.

வேறு சிறைக்குள் வாகனம் நுழைந்தவுடன், 16 கைதிகளுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

இருந்த போதும் 14 கைதிகள் வழியிலேயே உயிரிழந்தனர். 2 பேர் மாத்திரம் உயிர் பிழைத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like