side Add

அளம்­பில் துயி­லு­மில்­லக் காணி அள­வீடு -மக்­க­ளின் எதிர்ப்­பால் பிற்­போ­டப்­பட்­டது!!

முல்­லைத்­தீவு,  அளம்­பில் துயி­லு­மில்­லக் காணியை 24ஆம் சிங்க ரெயி­மண்ட் இரா­ணு­வப் பிரி­வுக்கு வழங்­கு­வ­தற்­கான காணி அள­வீட்டு முயற்சி மக்­க­ளின் எதிர்ப்­பால் பிற்­போ­டப் பட்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கரை­து­றைப்­பற்­றுப் பிர­தேச செய­லர் பிரி­வின் கீழ், அளம்­பில் தெற்கு கிராம அலு­வ­லர் பிரி­வில் அமைந்­துள்ள, அளம்­பில் மாவீ­ரர் துயி­லு­மில்­லம் அமைந்த தனி­யார் காணியை அள­வீடு செய்து, 24ஆம் சிங்க ரெஜி­மண்ட் இரா­ணு­வப் பிரி­வுக்கு பாரப்­ப­டுத்த, நில அள­வைத் திணைக்­க­ள த்­தி­னர் நேற்று நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

இதற்கு மக்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அத்­து­டன், போரில் இறந்­த­வர்­க­ளின் உடல்­கள் அடக்­கம் செய்­யப்­பட்ட இந்­தப் பகு­தியை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்க வேண்­டாம். இதை பொது­மக்­க­ளா­கிய எமக்­குத் தாருங்­கள். நாம் இனி­வ­ரும் காலங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­களை முன்­னெ­டுக்க உதவி புரி­யுங்­கள் – என்று நில அளவை அலுவலர்க ளிடம் மனு­வொன்­றும் கைய­ளிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து காணி­அ­ள­வீடு பிற்­போ­டப்­பட்­டது.

இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உறுப்­பி­னர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராசா கருத்­துத் தெரி­விக்­கை­யில்,
அளம்­பில் பகு­தி­யில் அமைந்­துள்ள 24ஆவது சிங்க ரெஜி­மண்ட் இரா­ணுவ முகா­முக்கு காணி அளந்து பாரப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்சி இடம்­பெற்­றது. இருப்­பி­னும் குறித்த முயற்சி தடுத்து நிறுத்­தப் பட்­டுள்­ளது.

குறித்த காணி போர்க்­கா­லப் பகு­தி­யில், இறந்த உற­வு­கள் புதைக்­கப்­பட்ட காணி­யா­கும். இந்தக் காணி­யில் புதைக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள், பல கால­மாக நினை­வேந்­தல் நிகழ்­வு­ க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர் – என்று தெரி­வித்­தார்.

You might also like