400 ஆண்டுகள் பழமையான பைபிள் திருட்டு!!

அமெரிக்கா நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிளை மத்திய புலனாய்வு பொலிஸார் நெதர்லாந்தில் மீட்டனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற புகழ் பெற்ற நூலகம் உள்ளது. அங்கு பழமைவாய்ந்த புத்தகங்களுடன் பழங்கால அரிய பொக்கிஷங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1990 ஆம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும் அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் மதிப்புடைய 300க்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களை திருடிச் சென்றனர்.

அதில் 400 ஆண்டுகள் பழமையான பைபிளும் ஒன்று. திருட்டுச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு பொலிஸார் இந்த வழக்கை கையில் எடுத்தனர்.

இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

You might also like