side Add

அழாமல் வெங்காயம் வெட்ட…!!

வெங்காயம் நறுக்கினால் கண்களில் இருந்து வெளிவருவதற்கு, வெங்காயத்தில் கண்களுக்கு எரிச்சலைத் தரும் நொதிப்பொருள் ஒன்று உள்ளது. அந்த நொதிப் பொருள், காற்றில் கலந்து, கண்களை சேர்வதால் தான், கண்களில் இருந்து தண்ணீர் வருகிறது. வெங்காயம் நறுக்கும் போதும் கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம். அத்தகைய வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

கூர்மையான கத்தி
வெங்காயத்தை நறுக்கும் போது கூர்மையான கத்தியைப் பயன்படுத்த வேண்டும். இதனால் வெங்காயத்திலிருந்து வெளிவரும் நொதியின் அளவு குறைந்து, கண்ணீர் வராமல் இருக்கும்.

தண்ணீர்
வெங்காயம் நறுக்கும் போது தண்ணீரில் வைத்துக் கொண்டு வெட்டலாம் அல்லது தண்ணீரில் ஊற வைத்து, பின் அதனை எடுத்தும் வெட்டலாம். இதனாலும் கண்ணீர் வராமல் இருக்கும்.

வினிகர்
வெங்காயத்தை வைத்து நறுக்கும் பலகையில் சிறிது வினிகரை தேய்த்து வெட்டினால், வினிகர் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் நொதிகளை அழித்துவிடும்.

உப்பு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு ஊற வைத்து, நறுக்கினாலும் அழுவதைத் தடுக்கலாம்.

மெழுகுவர்த்தி
வெங்காயம் வெட்டும் போது அருகில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வெங்காயம் நறுக்கினால், வெங்கயாத்திலிருந்து வெளிவரும் நொதியானது காற்றில் கலந்து, கண்களை கலங்க வைப்பதற்கு முன், மெழுகுவர்த்தியில் இருந்து வெளிவரும் வெப்பக்காற்றானது தடுத்துவிடும்.

சூயிங் கம்
நிறைய மக்கள் சூயிங் கம்மை வாயில் போட்டு மென்று கொண்டு, வெங்காயத்தை நறுக்கினால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதைத் தவிர்க்கலாம்.சொல்கின்றனர்.

You might also like