side Add

இமை­யூர் புளூஸ் அணி துடுப்­பாட்­டத்­தில் மகு­டம்!!

கர­ண­வாய், இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் தனது வீரர்­க­ளுக்கு இடை­யில் முன்­னெ­டுத்த துடுப்­பாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் இமை­யூர் புளூஸ் அணி கிண்­ணம் வென்­றது.

இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த இறு­தி­யாட்­டம் இடம்­பெற்­றது. இமை­யூர் புளூஸ் அணியை எதிர்த்து இமை­யூர் ரெட் ரைடர்ஸ் அணி மோதி­யது.

நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற புளூஸ் அணி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டத் தீர்­மா­னித்­தது. அந்த அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 8 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 7 இலக்­கு­களை இழந்து 57 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக மாது­ளன் 20 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் சுகந்­தன் 3 இலக்­கு­க­ளை­யும், அமல், கீர்த்­தன் இரு­வ­ரும் தலா 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய ரெட் ரைடர்ஸ் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 8 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­க­ளில் 6 இலக்­கு­களை இழந்து 43 ஓட்­டங்­க­ளைப் பெற்று 14 ஓட்­டங்­க­ளால் தோல்­வி­ய­டைந்­தது. அதி­க­பட்­ச­மாக சுசீ­லன் 22 ஓட்­டங்­க­ளைப் பெற்­றுக்­கொ­டுத்­தார். பந்­து­வீச்­சில் முரளி 3 இலக்­கு­க­ளை­யும், பிறேம் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னார்­கள்.

You might also like