இருட்டு அறையில் முரட்டு குத்து……அடுத்து!!

கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளம் ரசிகர்களை கூண்டோடு கவர்ந்தவர் இயக்குனர் பி ஜெயக்குமார். அதற்குப் பின்னர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார்.

அதனை தொடர்ந்து ஆர்யா மற்றும் ஷாயிஷா நடிப்பில் காமெடி கதைக்களத்தில் வெளியான ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. தற்போது மீண்டும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கில் ரீ மேக் செய்து வருகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.இந்தப் படத்திலும் இயக்குனருக்கு கைராசியான நடிகர் கௌதம் கார்த்திக் 3 ஆவது முறையாக இணையவுள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கும் இந்த படத்துக்கு ‘ தீமை தான் வெல்லும் ‘ என்று பெயரிட்டுள்ளனர்.

காமெடி திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், கதாநாயகியே இல்லாமல் இப்படத்தை இயக்க விருக்கிறார்களாம் .

You might also like