side Add

ஊடகங்களை விமர்சிக்க முன் சுயபரிசீலனை செய்யலாமே!!

இலங்கை மதச் சார்­பற்ற நாடாக இருக்­க­வேண்­டும் என்­ப­தையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பா­டா­கத் திட்­ட­வட்­ட­மா­கக் கொண்­டி­ருக்­கின்­றது. அனைத்து மக்­க­ளும் சாதி, இனம், மதம், பால், வயது என்ற எந்­த­வி­த­மான வேறு­பா­டு­க­ளும் காட்­டப்­ப­டா­மல் சம­மாக மதிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று சொல்­லப்­ப­டு­கின்ற அர­ச­மைப்­பிலே ஒரு சம­யத் துக்கு முத­லி­டம் கொடுப்­பது என்­பது முற்­றி­லும் மாறு­பட்­ட­தாக, முர­ணா­ன­தாக இருக்­கும். அத­னால் ஒரு குறித்த சம­யத்­ துக்கு முத­லி­டம் கொடுப்­பது என்­பது எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மு­டி­யா­தது.

இப்­படி யார் சொல்­லி­யி­ருக்­கக்­கூ­டும் என்று தமிழ் மக்­கள் ஆச்­ச­ரி­யப்­ப­டத் தேவை­யில்லை. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்த தெளி­வான கருத்­துக்­கள்­தான் இவை. வெளி­நாட்­டி­லி­ருந்து இயங்­கும் தமிழ் ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யில் அறுத்து உறுத்து மிகத் தெளி­வாக சுமந்­தி­ரன் கூறிய கருத்­துக்­கள் இவை. அதற்­கான ஆதா­ரம் காணொலி வடி­வில் இன்­றும் இணை­யத்­தில் காணக்­கி­டைக்­கின்­றது.

பௌத்த மதத்துக்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­ச­மைப்பு வழி­காட்­டல் குழு­விலே இணங்­கி­யி­ருக்­கி­றது என்று சிங்­கள அர­சி­யல்­வா­தி­கள் தெரி­விக்­கும் கருத்­துத் தொடர்­பில் சுமந்­தி­ர­னி­டம் அந்த ஊட­கம் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கும்­போதே சுமந்­தி­ரன் இப்­ப­டித் தெரி­வித்­தார்.

அது­மட்­டு­மல்ல, அர­ச­மைப்பு பேரவை உரு­வாக்­கம் தொடர்­பான தீர்­மான வரைவு நாடா­ளு­மன்­றத்துக்கு வந்­த­போது ஆற்­றிய உரை­யில், எந்­த­வொரு இனத்துக்கோ சம­யத்துக்கோ முத­லி­டம் கொடுப்­பது சரி­யா­ன­தொன்­றல்ல என்று தெளி­வா­கவே சொல்­லி­யி­ருந்­தார். ஆகவே, பௌத்த மதத்துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கின்ற ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு நாங்­கள் வர­வில்லை என்று திட்­ட­வட்­ட­மா­கச் சொல்­லிக்­கொள்­கின்­றேன் என்று அந்­தக் காணொ­லி­யில் அவர் எந்­த­வி­தக் குழப்­பங்­க­ளும் இன்­றிச் சொல்­கி­றார்.

இதில் கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய முக்­கிய விட­யம், “ஒரு மதத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கு­வது என்­பதை எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது” என்­கிற அவ­ரது வாச­கம். ஒரு­வரி ஒரு எழுத்து மாற்­ற­மின்றி அந்­தக் காணொ­லி­யில் அவர் அப்­ப­டித்­தான் கூறு­கின்­றார்.

அதே சுமந்­தி­ரன்­தான் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணத்­தில் கருத்­துத் தெரி­விக்­கும்­போ­தும் வவு­னி­யா­வில் கருத்­துத் தெரி­விக்­கும்­போ­தும் புதிய அர­ச­மைப்­பில் பெளத்த மதத்துக்கு முன்­னு­ரிமை கொடுப்­ப­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்புக்கு எந்­த­வொரு பிரச்­சி­னை­யும் இல்லை என்று கூறி­யி­ருக்­கி­றார். உத்­தேச அர­ச­மைப்பு வரை­விலேயே அதனை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றோம் என்­றும் கூறி­யி­ருக்­கி­றார்.

“பௌத்­தத்­துக்கு முத­லி­டம் என்று செய்­தி­கள் வந்­துள்­ளன. இடைக்­கால அறிக்­கை­யில் அது சொல்­லப்­பட்­டுள்­ளது. பௌத்­தத்­துக்கு முத­லி­டம் என்று சொல்­லப்­ப­டு­வ­தில் எங்­க­ளுக்கு ஆட்­சே­ப­னை­யில்லை. ஆனால் அப்­ப­டிச் சொல்­லப்­ப­டு­வ­த­னால் மற்­றைய சம­யத்­த­வர்­களோ அல்­லது சம­யம் இல்­லா­த­வர்­களோ எந்த விதத்­தி­லும் குறைந்­த­வர்­க­ளாக நடத்­தப்­ப­ட­மு­டி­யாது. அனை­வ­ரும் சம­மாக நடத்­தப்­ப­ட­வேண்­டும். அனைத்து சம­யங்­க­ளும் சம­மா­கப் பேணப்­ப­ட­வேண்­டும். என்ற வாக்­கி­யங்­க­ளும் உள்­ள­டக்­கப்­பட வேண்­டும். என்று இடைக்­கால அறிக்­கை­யில் உள்­ளது.” இப்­ப­டித்­தான் யாழ்ப்­பா­ணத்­தில் தெரி­வித்­தார் சுமந்­தி­ரன்.

இப்­படி மூன்­றரை வருட காலத்துக்குள் முன்­னுக்­குப் பின்­னர் முற்­றி­லும் முர­ணா­கக் கருத்­துச் சொல்­லு­கின்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­தான் ‘‘ஏக்­கிய ராஜ்­ஜிய’’ என்­றால் ஒற்­றை­யாட்சி இல்லை என்று 100 தட­வை­க­ளுக்கு மேல் விளங்­கப்­ப­டுத்­தி­விட் ­டேன், ஆனால் தமிழ் ஊட­கங்­கள் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­றால் ஒற்­றை­யாட்சி என்றே எழு­து­கின்­றன என்­றும் விமர்­சித்­தி­ருக்­கி­றார்.

ஒரு மதத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கு­வதை எந்­தக் காலத்­தி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று கூறி­ய­வர், அது­வும் புதிய அர­ச­மைப்­பில் அது­தான் கட்­சி­யின் நிலைப்­பாடு என்று கூறி­ய­வர், எந்­தச் சந்­தடி சத்­த­மும் இன்றி பௌத்­தத்துக்கு முன்­னு­ரிமை என்­பதை ஏற்­றுக்­கொண்­டு­விட்­டோம் என்­றும் கூறு­கின்­றார்.

அது­போன்று இன்­னும் சில காலங்­க­ளின் பின்­னர் ஏக்­கிய ராஜ்­ஜிய என்­பதை ஒற்­றை­யாட்சி என்று என்றோ நாம் ஏற்­றுக்­கொண்­டு­விட்­டோமே என்று கூற­மாட்­டார் என்­பது நிச்­ச­ய­மல்ல என்­ப­தால், ஊட­கங்­கள் பரந்­து­பட்ட புரி­த­லுக்­கு­ரி­ய­தையே தொடர்ந்­தும் பேசு­கின்­றன. எனவே ஊட­கங்­களை விமர்­சிப்­ப­தற்கு முன்­னர் அர­சி­யல் ­வா­தி­கள் தங்­க­ளைச் சுய­ப­ரி­சோ­தனை செய்­து­கொள்­வது சிறந்­தது.

You might also like