side Add

ஐய்யப்பன் தரிசனத்துக்குச் சென்ற 10 பேருக்கு நடந்த சோகம்!!

ஐய்யப்பன் விரதமிருந்த 14 பேர் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வானில் சென்றனர்.

அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், தமிழகம் வந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக நேற்றுப் பகல் வானில் புறப்பட்டனர்.

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி ஒரு பாரவூர்தி வேகமாக சென்று கொண்டிருந்தது.

இரண்டும் திடீரென்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. அதில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியபடி அபய குரல் எழுப்பினர்.

தகவலறிந்த பொலிஸார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே 3 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

You might also like