ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு!!

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலம் முஸ்லிம் மக்களுடன் மிகுந்த நட்புறவுடன் வாழ்ந்து வருகின்றோம். ஒரு சிலர் செய்த தீவிர வாத நடவடிக்கையினால் ஒட்டு மொத்த முஸ்லிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன் பார்ப்பது தவறு என்று மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய சமாதான போரவை மற்றும் தொடர்பாடலுக்கான மையம் ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மத தலைவர்களையும், பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளையும் ஒன்றிணைத்து இன்று நடத்திய விசேட கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.

You might also like