side Add

கண்ணீருக்கும் தண்ணீருக்கும் மத்தியில் போராடும் எமக்கு உரிய தீர்வு தாருங்கள்

முல்லையில் போராடும் இருதரப்பினரும் கோரிக்கை

கண்ணீருக்கும் தண்ணீருக்கும் மத்தியில் போராடிக்கொண்டிருக்கிறோம். எமது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் – என்று கேப்பாபிலவில் காணிவிடுவிப்புக்கோரிப் போராடுவோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் கவலையுடன் தெரிவித்தனர்.

தீபாவளித் தினமான இன்றும் (நேற்றுமுன்தினம்) போராடவேண்டிய நிலையிலேயே உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமது உறவினர்களை எம்மிடம் ஒப்படையுங்கள்  என்று 610 ஆவது நாளாக முல்லைத்தீவில் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணிவிடுவிப்புக்காகத் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபிலவு மக்கள் தங்கள் பூர்வீக நிலங்களை விடுவித்தால்தான் அதில் எங்களுக்கான பாரம்பரிய நிகழ்வுகளை நடத்தமுடியும் என்றும் தெரிவித்துள்னர்.

“அரசு என்னதான் அறிவித்தாலும் எங்கள் நிலத்தில் நாங்கள் குடியேறவேண்டும், எங்கள் ஆலயங்களில் நாங்கள் வழிபாடுசெய்ய வேண்டும். அதுவரை எங்களுக்கான தீபாவளியோ தமிழ்ப் பண்டிகைகளோ கிடையாது.  அரசு உரிய தீர்வைத் தரும்வரை எமது போராட்டம் தொடரும்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

You might also like