கருணாநிதிக்காக- ஹன்சிகா செய்த காரியம்!!

கருணாநிதியின் மறைவு காரணமாக நடிகை ஹன்சிகா தனது புதிய படத்தின் அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளார்.

2003-ம் ஆண்டில் இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா, 2007-ம் ஆண்டில் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹன்சிகா தனது 50 ஆ-வது படத்தை எட்டியுள்ளார்.

ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 50வது படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த விவரங்களை நடிகர் தனுஷ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதியின் மறைவு காரணமாக அதைத் தள்ளி வைத்துள்ளதாக ஹன்சிகா தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு குறித்து தனது கீச்சகப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ஹன்சிகா, “கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் துயரமளிக்கிறது. நாட்டிலேயே சிறந்த தலைவர்களில் ஒருவர். அவரது மாபெரும் இழப்பால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழர்களுக்கும் இறைவன் தைரியமளிப்பார் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close